'சரிவில் இருந்து மீண்டு வருவோம்' - ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் லபுஸ்சேன் நம்பிக்கை

சரிவில் இருந்து ஆஸ்திரேலிய அணி மீண்டு வரும் என லபுஸ்சேன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
'சரிவில் இருந்து மீண்டு வருவோம்' - ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் லபுஸ்சேன் நம்பிக்கை
Published on

லக்னோ,

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில் அந்த அணியின் பேட்ஸ்மேன் லபுஸ்சேன் கூறுகையில், 'அரைஇறுதிக்கு தகுதி பெற இனி நாங்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.

ஆஸ்திரேலியா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது என்றால் நெருக்கடியில் சிறப்பாக விளையாடியதே காரணம். இந்த தடவை நன்றாக தொடங்கவில்லை. ஆனால் இது தொடரின் ஆரம்பம் தான், முடிவல்ல. சரிவில் இருந்து மீண்டு வருவோம்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com