ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
Published on

துபாய்,

ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துபாயில் நடைபெற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் பிரெண்டன் கிங் அதிகபட்சமாக 47 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஸ்பிரிங்கர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றாலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com