3வது டி20: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
3வது டி20: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
Published on

ஜோகனர்ஸ்பெர்க்,

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-0 என்ற புள்ளி கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகனர்ஸ்பெர்க்கில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 10 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தபோது வானிலை மோசமடைந்தது. மின்னலுடன் லேசான மழை பெய்தது.

இதனால், முதல் இன்னிங்ஸ் முடிவு பெற்றது. இதையடுத்து டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா 10 ஓவரில் 124 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 10 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது.

இதனால் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்காவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றிபெற்றது. அதேவேளை, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com