ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 19 சிக்சர் அடித்து வெஸ்ட் இண்டீஸ் சாதனை

வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 19 சிக்சர் அடித்து வெஸ்ட் இண்டீஸ் சாதனை
Published on

மும்பை,

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. அதன்படி, நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 17.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 19 சிக்ஸர்களை தனது இன்னிங்சில் பறக்க விட்டது. இதன் மூலம் உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர் சாதனையை சமன் செய்தது. ஏற்கனவே 2014-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அயர்லாந்துக்கு எதிராக நெதர் லாந்து 19 சிக்சர் எடுத்திருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com