சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓய்வு

இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 86 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

கயானா,

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷானன் கேப்ரியல் (வயது 36) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 86 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், அதில் 59 போட்டிகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.

இவரது கடைசி ஆட்டம் இந்தியாவுக்கு எதிராக கடந்த வருடம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியாகும். அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஷானன் கேப்ரியல் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com