இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு: கமீல் பூரனுக்கு டி20-ல் அறிமுகமாக வாய்ப்பு

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு: கமீல் பூரனுக்கு டி20-ல் அறிமுகமாக வாய்ப்பு
Published on

சென்னை,

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளம் தொடக்க வீரர் கமீல் பூரன் முதன்முறையாக டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.

3 ஒருநாள், 5 டி20 போட்டிகள்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 27-ந் தேதியும், 2-வது போட்டி செப்டம்பர் 30-ந் தேதியும், 3-வது போட்டி அக்டோபர் 3-ந் தேதியும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 6, 9, 11, 14 மற்றும் 17-ந் தேதிகளில் நடைபெறுகிறது.

கமீல் பூரனுக்கு வாய்ப்பு

இளம் தொடக்க ஆட்டக்காரரான கமீல் பூரன், முதன்முறையாக வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், ஷிம்ரோன் ஹெட்மையரும் டி20 அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். எனினும், இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கேம்ப்பெல் திரும்பினார்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி 2 போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாத தொடக்க வீரர் ஜான் கேம்ப்பெல், இந்திய தொடருக்கான ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இளம் பேட்ஸ்மேன் ஜூவல் ஆண்ட்ரூ, ஒருநாள் மற்றும் டி20 என இரு அணிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி

ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, ஜான் கேம்ப்பெல், கீசி கார்ட்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்ட், ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், விட்டல் லாட்ஜ், குடாகேஷ் மோட்டி, கீமோ பால், ஷெர்பேன் ரூதர்போர்ட், ஜெய்டன் சீல்ஸ்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி

ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்ட், ஷிம்ரோன் ஹெட்மையர், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், குடாகேஷ் மோட்டி, கீமோ பால், கமீல் பூரன், ரோவ்மேன் போவெல், ஷெர்பேன் ரூதர்போர்ட், குவென்டின் சாம்சன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஸ்பிரிங்கர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com