சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி


சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி
x

image courtesy:PTI

இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டி20 ரன் குவித்த வீரராக சாதனை படைத்தவர்.

டிரினிடாட்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆன நிக்கோலஸ் பூரன் (வயது 29) சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். 29 வயதே ஆன இளம் வீரர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டி20 போட்டிகளில் (106 போட்டிகள்) விளையாடிய வீரராகவும், அதிக ரன் குவித்த வீரராகவும் (2,275 ரன்கள்) சாதனை படைத்துள்ளார். அத்துடன் 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,983 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும் 30 வெள்ளைப்பந்து போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடைசியாக கடந்த வருடம் விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 2023- ஒருநாள் உலகக்கோப்பை தகுதி சுற்றில் தோல்வியடைந்ததில் இருந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.

இத்தகைய சூழலில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றுள்ளார். இருப்பினும் வெளிநாடுகளில் நடைபெறும் ஐ.பி.எல். போன்ற லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாட உள்ளார்.

1 More update

Next Story