ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ்

டெய்லரின் அனுபவமும் அதிரடியான பேட்டிங்கும் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ்
Published on: 

ஹாரரே,

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. ஹராரேவில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, இந்தத் தொடரில் தனது சிறந்த ஸ்கோரை பதிவு செய்து 20 ஓவர்களில் 142/6 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கெலிஸ் ந்த்லோவு சிறப்பாக விளையாடி 48 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். கிறிஸ்டின் முடாசா ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் சேர்த்தார்.

143 ரன்கள் என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஸ்டெஃபனி டெய்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் வெறும் 39 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் விளாசி அணியின் வெற்றியை எளிதாக்கினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெய்லரின் அனுபவமும் அதிரடியான பேட்டிங்கும் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரை 3-0 என கைப்பற்றி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முழுமையான தொடர்வெற்றியை பதிவு செய்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com