தோனியின் ஐபிஎல் கிரிக்கெட் ஓய்வு சார்ந்த திட்டம் என்ன...? - சுரேஷ் ரெய்னா கூறிய தகவல்...ரசிகர்கள் மகிழ்ச்சி...!

நடப்பு ஐபிஎல் சீசனுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
Image Courtesy: TWITTER  
Image Courtesy: TWITTER  
Published on

சென்னை,

ஐபிஎல் தொடர் இந்தியாவில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்தியாவுக்கு 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்க்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்டவற்ற வென்று கொடுத்த எம்.எஸ்.தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

அவர் இந்த வருட ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், 'தோனியின் ஐபிஎல் கிரிக்கெட் ஓய்வு சார்ந்த திட்டம் என்ன?' என்பது குறித்து சுரேஷ் ரெய்னா தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சென்னை-மும்பை ஆட்டத்தின் போது சுரேஷ் ரெய்னா தோனியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தோனி தன்னிடம் தகவல் ஒன்றை கூறியதாக ரெய்னா கூறியுள்ளார். அது என்னவென்றால்,

ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு மேலும் ஒரு வருடம் விளையாடுவேன் என தோனி தன்னிடம் தெரிவித்ததாக ரெய்னா தெரிவித்துள்ளார். தோனியின் இந்த வார்த்தைகள் சென்னை அணிக்காக 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முடிவோடு அவர் இயங்கி வருவதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

அண்மையில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது 'இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை' என வர்ணனையாளரிடம் தோனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com