கிரிக்கெட்டில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை என்ன..? - சச்சின் பதில்

சச்சின் தெண்டுல்கரிடம் ரசிகர் ஒருவர் இந்த கேள்வியை கேட்டார்.
கிரிக்கெட்டில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை என்ன..? - சச்சின் பதில்
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் தெண்டுல்கரிடம், ரசிகர் ஒருவர் கிரிக்கெட்டில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சச்சின், நான் டிஆர்எஸ் விதிமுறையில் நடுவரின் அழைப்பு (Umpires Call) தொடர்பான விதியை மாற்றுவேன். வீரர்கள் கள நடுவரின் முடிவில் அதிருப்தி அடைந்ததால் மேல் முறையீடு செய்கின்றனர். எனவே நீங்கள் மீண்டும் அந்த பழைய தீர்ப்பை எடுப்பதற்கான எந்த விருப்பமும் இருக்க கூடாது. வீரர்களுக்கு மோசமான காலகட்டங்கள் இருப்பது போல, அம்பயர்களுக்கும் மோசமான காலகட்டங்கள் உள்ளன. தொழில்நுட்பம் தவறாக இருந்தாலும், அது தொடர்ந்து ஒரே மாதிரியான தவறுகளைச் செய்யும் என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com