ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு திரும்புவது எப்போது.? - சுப்மன் கில் பதில்

ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு திரும்புவது எப்போது.? - சுப்மன் கில் பதில்
Published on: 

ஆக்லாந்து,

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஹர்திக் பாண்ட்யா குறித்து பேசியதாவது;

திறமைகளுக்கு ஈடு இணை இல்லை

"பாண்டியா ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர். ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் திறம்படச் செயல்படக்கூடியவர். அவரது திறமைகளுக்கு ஈடு இணை இல்லை. அவரிடம் இருக்கும் திறமை உலகில் ஒருசில வீரர்களுக்கே உள்ளன. அவர்து பந்துவீச்சு திறனும், பேட்டிங்கும் அணிக்கு மிகவும் மதிப்பு மிக்கது. ஹர்திக் பாண்டியா அணிக்குத் திரும்பினால், எங்கள் 7 மற்றும் 8 ஆம் பேட்டிங் வரிசை சரியாகிவிடும்.

கணுக்காலில் தசைப்பிடிப்பு

ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஏற்பட்ட பல காயம் காரணமாக துரதிர்ஷ்டவசமாக அவரால் அணியில் இணைய முடியவில்லை. இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது கணுக்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக மீண்டும் அவரால் விளையாட முடியவில்லை. அவருடன் தொடர்பில் இருக்கிறோம். விரைவில் அவர் உடற்தகுதி பெற்று, சில உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என நம்புகிறோம். அதன் பிறகு, அவர் மீண்டும் அணியில் திரும்புவார்."

இவ்வாறு கில் கூறினார்.

X