

இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் சுப்மன் கில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் முதலில் ஒரு நாள் தொடர். அதன் பிறகு 20 ஓவர் போட்டி, டெஸ்ட் தொடர் என்ற வரி சையில் அமைந்திருந்தால், 5 ஒருநாள் போட்டிகளிலும் நாங்கள் வலிமையான அணியுடன் விளையாடி இருக்க முடியும். ஆனால் ஒரு நாள் தொடருக்கும். டெஸ்ட் தொடருக்கும் இடைவெளி மிக குறைவாக இருப்பதால், அதை செய்ய முடிய வில்லை. டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்காக அதில் உள்ள வீரர்கள், கடைசி இரு ஒரு நாள் போட்டிகளில் விளையாட முடியாத சூழல் காணப்படுகிறது.
ஒரு நாள் போட்டியை இவ்வளவு தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு (உள்ளூர் நேரம்)) விளையாடுவது இதுவே முதல் முறையாகும். எனவே 2-வது இன்னிங்சில் நாங்கள் பந்து வீசும்போதோ அல்லது பேட்டிங் செய்யும் போதோ ஆடுகள சூழல் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. மேலும் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்தும் போது, இரவு நேரத் தில் பந்து அதிக அளவில் ஸ்விங்குடன் பவுன்சும் ஆகும். எனவே சீதோஷ்ண நிலை மற்றும் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும்.
ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இந்த தொடரின் முடிவு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஒரு சமநிலையை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு, அதன் பிறகு சொந்த மண்ணில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அசத்தினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
ஹர்திக் பாண்ட்யா மிகச்சிறந்த வீரர். வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டரான அவர் ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் பந்து வீசக்கூடிய திறன் படைத்தவர். அதே சமயம் பேட்டிங்கிலும் சிறந்த பங்களிப்பு அளிக்கக்கூடியவர். இத்தகைய ஆல்-ரவுண்டர்கள் அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள். ஐ.பி.எல்.தொடருக்கு பிறகு அவரால் விளையாட முடியாமல் போனது (காயத்தால் பாதிப்பு) துரதிர்ஷ்டவசமானது. இது குறித்து நாங்கள் பலமுறை விவாதித்து இருக்கிறோம். அவர் விரைவில் குணமடைந்து. சில உள்நாட்டு போட்டிகளில் விளையாடுவார் என்று நம்புகிறேன். அதன் பிறகு அவர் மீண்டும் இந்திய அணியில் இணைவதை பார்க்கலாம்.
ஹர்திக் பாண்ட்யா அணிக்குள் வரும் போது, 7-வது மற்றும் 8-வது பேட்டிங் வரிசை பிரச்சினை தீர்ந்து விடும். அத்து டன் பேட்டிங்கில் சரியான கலவையுடன் கூடிய அணியாக நாங்கள் மாறுவோம்.