டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியினர் நாடு திரும்புவது எப்போது..? வெளியான தகவல்

டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணியினர் இன்னும் தாயகம் திரும்பவில்லை.
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியினர் நாடு திரும்புவது எப்போது..? வெளியான தகவல்
Published on

பார்படாஸ்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்திய 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை கைப்பற்றியது. இதன் இறுதிப்போட்டி பார்படாஸிம் நடைபெற்றது. கோப்பையை வென்று 2 தினங்களாகியும் இந்திய அணியினர் இன்னும் தாயகம் திரும்பவில்லை. அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அதற்கான காரணம் என்னவெனில், இறுதிப்போட்டி முடிவடைந்ததும் பார்படாஸ் தீவை புயல் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளாது. அதனால் பார்படோஸ் தீவு முடங்கியுள்ளது. மோசமான வானிலையால் அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் பார்படோசில் தவிக்கும் இந்திய வீரர்கள் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம் திறக்கப்பட்டதும், தனி விமானத்தில் வீரர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்தியா திரும்பியதும் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com