அரையிறுதிக்கு தகுதி பெறும் அணி எது ? இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

கடைசி லீக் ஆட்டத் தில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
அரையிறுதிக்கு தகுதி பெறும் அணி எது ? இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
Published on

கொல்கத்தா,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரை இறுதிக்கு முன்னேறுவது யார்? என்பதை நிர்ண யிக்கும் சூப்பர் சுற்றின் கடைசி லீக் ஆட்டத் தில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

இந்திய அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. சூப்பர்8 சுற்றின் முதலாவது தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது.அடுத்து சென்னை யில் நடந்த 2-வது ஆட்டத்தில் 72 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை பந்தாடி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 4 லீக் ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்தது. சூப்பர்8 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் 107 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. அந்த அணி யும் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளுடன் உள்ளது.

காலிறுதி போன்ற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைய இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் பரபரப் புக்கு பஞ்சம் இருக்காது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com