ரோகித், தோனி, கோலி, டி வில்லியர்ஸ் இவர்களில் யாரால் 10 பந்துகளில் 30 ரன்கள் அடிக்க முடியும்..? - பிரியன்ஷ் ஆர்யா தேர்வு


ரோகித், தோனி, கோலி, டி வில்லியர்ஸ் இவர்களில் யாரால் 10 பந்துகளில் 30 ரன்கள் அடிக்க முடியும்..? - பிரியன்ஷ் ஆர்யா தேர்வு
x

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பிரியன்ஷ் ஆர்யாவிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.

பெங்களூரு,

அண்மையில் முடிவடைந்த ஐ.பி.எல். தொடரில் பல இளம் வீரர்கள் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தி இருந்தனர். அதில் பிரியன்ஷ் ஆர்யா குறிப்பிடத்தக்க ஒருவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெறும் 39 பந்துகளில் சதமடித்து அனைவரையும் மிரள வைத்தார். அவரது அதிரடியான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த சூழலில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பிரியன்ஷ் ஆர்யாவிடம் கடைசி 10 பந்துகளில் 30 ரன்கள் அடிக்க வேண்டும். இந்த சூழலுக்கு ஏற்ப ஏபி டிவில்லியர்ஸ், எம்எஸ் தோனி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரில் ஒரு பேட்ஸ்மேனை தேர்வு செய்யுமாறு தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு சற்றும் யோசிக்காத பிரியன்ஷ் ஆர்யா, ‘விராட் கோலி. அவர் சேஸ் மாஸ்டர்’ என்று பதிலளித்தார்.

1 More update

Next Story