நீங்கள் விளையாடிய கால கட்டத்தில் சிறந்த 5 டெஸ்ட் வீரர்கள் யார்..? டி வில்லியர்ஸ் பதில்

டி வில்லியர்ஸ் தேர்வு செய்தவர்களில் விராட் கோலி இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவரது அதிரடி ஆட்டத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு உண்டு. ரசிகர்கள் இவரை 'மிஸ்டர் 360' என்றழைப்பர். அந்த அளவுக்கு மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்சர் அடிக்கும் திறமை படைத்தவர். விளையாடிய கால கட்டங்களில் ஏராளமான சாதனைகள் படைத்த இவர், 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

இதனையடுத்து ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். அதிலும் கடந்த 2021-ம் ஆண்டோடு விடை பெற்றார். அதன் பின் எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை. ஐ.பி.எல். தொடரில் ஆர்சிபி அணியில் விளையாடியதன் மூலம் இந்தியாவில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஏபி டி வில்லியர்சிடம் நீங்கள் விளையாடிய கால கட்டத்தில் சிறந்த 5 டெஸ்ட் வீரர்கள் யார்? என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ஜாக் காலிஸ், ஷேன் வார்னே, பிளிண்டாப்,முகமது ஆசிப் மற்றும் சச்சின் ஆகியோர்களின் பெயர்களை கூறினார்.

இருப்பினும் டி வில்லியர்ஸ் தேர்வு செய்தவர்களில் அவருடைய நெருங்கிய நண்பரான விராட் கோலி இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com