விராட் கோலி, ஜோ ரூட் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்..? இங்கிலாந்து முன்னாள் வீரர் தேர்வு


விராட் கோலி, ஜோ ரூட் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்..? இங்கிலாந்து முன்னாள் வீரர் தேர்வு
x

image courtesy:PTI

விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் இது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அத்துடன் ரோகித், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவர்கள் இல்லாமல் இந்திய அணி எப்படி விளையாட போகிறது? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது. மேலும் அவர்களின் இடத்தை நிரப்பப்போவது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த சூழலில் இங்கிலாந்து முன்னாள் வீரரான மாண்டி பனேசரிடம் விராட் கோலி மற்றும் ஜோ ரூட் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பனேசர், "நான் விராட் கோலி என்று கூறுவேன். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். ஏனெனில் அவர் தனது திறமையை வெளிப்படுத்துகிறார். அவரது குணாதிசயம், அவரது திறன் ஆகியவை அற்புதமானவை. அதனால்தான் விராட் கோலி" என்று கூறினார்.

1 More update

Next Story