தொடரை வெல்லப்போவது யார்..? - இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
Image Courtesy: @BCCIWomen
Image Courtesy: @BCCIWomen
Published on

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com