தொடரை கைப்பற்றப்போவது யார்..? - கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்..!

ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
Image Courtesy: @BCCI
Image Courtesy: @BCCI
Published on

பார்ல்,

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

இதையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 2 போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

நாளை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com