

சென்னை,
ஐபிஎல் 2026 தொடரில், சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
இதற்கிடையில், இந்தப் போட்டியில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத்தின் மறைவுக்கு இரங்கல் செலுத்தும் வகையில், இரு அணிகளின் வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
1951 முதல் 1960 வரை இந்தியாவுக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோபிநாத், 1952-ம் ஆண்டு இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்ற அணியில் இருந்தார். சென்னையில் பிறந்த கோபிநாத், தனது 96வது வயதில் கடந்த வியாழக்கிழமை காலமானார். இதற்கு இரங்கல் செலுத்தும் வகையில், இரு அணிகளின் வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
சென்னை அணி அடுத்து ஐதராபாத் அணியை 18-ம் தேதி எதிர்கொள்கிறது. கேகேஆர் அணி இதுவரை இந்தத் தொடரில் வெற்றி பெறாமல், தற்போது புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.