காயம் இருந்தும் சாஹலை விளையாட வைத்தது ஏன்...? - பாண்டிங் விளக்கம்

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Image Courtesy: @IPL / @PunjabKingsIPL / @KKRiders
Image Courtesy: @IPL / @PunjabKingsIPL / @KKRiders
Published on

முல்லன்பூர்,

ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் தரப்பில் ப்ரப்சிம்ரன் சிங் 30 ரன் எடுத்தார்.

கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 112 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி, பஞ்சாப் வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.1 ஓவரில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 16 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் திரில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் தரப்பில் அபாரமாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது சாஹலுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பின்னர் சாஹலின் பந்துவீச்சு குறித்தும், அவர் இந்த போட்டியில் விளையாடியது குறித்தும் பேசியிருந்த பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியதாவது,

சாஹல் கடந்த போட்டியின் போது தோள்பட்டை பகுதியில் காயமடைந்து இருந்ததால் கொல்கத்தா போட்டியில் விளையாட வைக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்தோம். அதனால் கொல்கத்தா அணிக்கெதிரான போட்டிக்கு முன்னதாக அவருக்கு பிட்னஸ் டெஸ்ட் வைக்கப்பட்டிருந்தது. மேலும், பயிற்சியின் போதும் அவரை நாங்கள் பந்துவீச வைக்கவில்லை.

இருந்தாலும் போட்டிக்கு முன்பாக நான் அவரை பார்த்து "நீ ஓகே-வாக இருக்கிறாயா?" என்று கேட்டேன். அதற்கு சாஹல் என்னிடம்: சார் 100 சதவீதம் நான் நன்றாக இருக்கிறேன். என்னை விளையாட அனுமதியுங்கள் என்று கேட்டார். அதன் பின்னரே அவரை விளையாட வைத்தோம். அப்படி விளையாடி எங்களுக்காக அவர் போட்டியில் வெற்றியும் பெற்றுக்கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com