ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் விளையாடாதது ஏன்?

நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் கடைசி வரை போராடி வீழ்ந்தது.
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் விளையாடாதது ஏன்?
Published on

அகமதாபாத்,

ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அணியில் இடம்பெறவில்லை. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கில் ‘மஸில் ஸ்பாஸம்’ (தசை வலி) காரணமாக களமிறங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனால் இப்போட்டியை ரஷித்கான் வழிநடத்தினார். டாஸ் நேரத்தில் ரஷித்கான் பேசுகையில், “கிலுக்கு லேசான தசை வலி ஏற்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் அணியில் சேருவார் என்று நம்புகிறோம்,” என்றார்.

Also Read
’21 வயதில் உலக கிரிக்கெட்டை ஆளப் போகிறார்’ - சூர்யவன்ஷிக்கு பட்லர் புகழாரம்
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் விளையாடாதது ஏன்?

கில்லுக்கு பதிலாக, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் குமார் குஷாக்ரா, களமிறங்கினார். அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி வரை போராடிய குஜராத்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றிபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com