இந்திய அணியில் சிராஜ், ஜடேஜா நீக்கப்பட்டது ஏன்? பயிற்சியாளர் கோடக் விளக்கம்

பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் பவுன்ஸ் கிடைக்கும்.
இந்திய அணியில் சிராஜ், ஜடேஜா நீக்கப்பட்டது ஏன்? பயிற்சியாளர் கோடக் விளக்கம்
Published on: 

வெலிங்டன்,

வெலிங்டனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. ஆனால், முகமது சிரா ஜூக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக பும்ரா. ஆகாஷ் தீப், அன் ஷூல் கம்போஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இதுபோல ரவீந்திர ஜடேஜா ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் களம் இறங்கினார். முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இடம்பெறாதது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

இந்திய அணி

இந்திய அணியின் சிறந்த ஆடும் லெவன் அணியையே நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. முகமது சிராஜ் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்.இலங்கை சுற்றுப்பயணத்தில் அவரது செயல்பாடுக்கும் தற்போதைய தேர்வுக்கும் சம்பந்தம் இல்லை. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப ஆகாஷ் தீப் அன்ஷூல் கம்போஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பந்தை ஸ்விங் செய்யவும், வேகத்துடன் வீசும் திறனும் கொண்டவர்கள். ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருப்பதால் உயரமான பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் பவுன்ஸ் கிடைக்கும். இது முதல் நாள் தான். ஆட்டம் போகப்போக ஆடுகளத்தின் தன்மையில் மாற்றம் ஏற்படும். நீங்கள் ஒரு அணியை தேர்வு செய்யும் போது போட்டியின் நான்கு அல்லது ஐந்து நாட்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நியூசிலாந்து அணியில் 4 இட துகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், சிறந்த தேர்வாக இருப்பார் என்று கருதி சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் நன்றாக பேட்டிங்கும் செய்வார். ரவீந்திர ஜடேஜா தலைசிறந்த ஆல்-ரவுண்டர். அவர் கடந்த காலங்களில் சிற்ப்பாக செயல்பட்டு இருக்கி றார். ஆனால் இந்த ஆட்டத்துக்கு இந்த வீரர்கள் கலவை பொருத்தமாக இருக்கும் என்று எடுத்துள்ளோம். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பந்துவீச்சுத் திறனில் இருந்து மற்ற வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X