கடைசி ஓவரை ராஜ் பவாவிடம் கொடுத்தது ஏன்?.. சூர்யகுமார் யாதவ் பதில்

கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை யாரும் எதிர்பாராத வகையில் ராஜ் பாவாவிடம் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கொடுத்தார்.

கடைசி ஓவரை ராஜ் பவாவிடம் கொடுத்தது ஏன்?.. சூர்யகுமார் யாதவ் பதில்
Published on

மும்பை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வென்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை யாரும் எதிர்பாராத வகையில் ராஜ் பாவாவிடம் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கொடுத்தார். ஆனால், அவரது முடிவு தவறாகவே போயிவிட்டது. வெற்றிக்கு தேவையான ரன்களை ஆர்.சிபி அடித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. தோல்விக்கு பிறகு மும்பை கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது:

“கடைசி ஓவரை ராஜ் பாவாவிடம் கொடுத்தது குறித்து சொல்வதானால், இந்த சீசன் முழுவதும் மட்டுமல்ல கடந்த ஆண்டிலிருந்தே அவர் அதற்காக நன்றாக பயிற்சி செய்து வந்தார். இந்த ஆண்டு அவரை பார்த்தபோது முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆல்-ரவுண்டராக இருந்தார். அதனால் அவரிடம் ஒரு அல்லது இரண்டு ஓவர்கள், குறிப்பாக கடைசி ஓவரின் பொறுப்பை கொடுத்து முன்னேறினோம். அவர் எங்களுக்காக வெற்றியை கிட்டத்தட்ட பெற்றுத்தந்தார்.

மொத்த ஸ்கோர் குறித்து பார்க்கும்போது, நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்ததாகவே நினைக்கிறேன். தவறான நேரத்தில் முக்கிய விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால் நமன் திர் மற்றும் திலக் வர்மா பேட்டிங் செய்த விதம் அருமையாக இருந்தது. இந்த பிட்ச்சில் அவர்கள் காட்டிய ஆட்டம் மிகுந்த குணநலனையும் தைரியத்தையும் வெளிப்படுத்தியது. அவர்கள் வேறு ஒரு பிட்ச்சில் விளையாடுவது போல இருந்தது. அவர்களைப் பற்றி எங்களுக்கு மிகவும் பெருமை.எப்போதும் போல எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இப்படியான கடினமான சூழ்நிலையில், குறிப்பாக புள்ளிப்பட்டியலின் கடைசியில் இருப்பது எங்களுக்கு பழக்கமில்லை. அதை ஏற்றுக்கொள்வது மிகவும் கஷ்டம். ஆனால் இந்த சீசன் முழுவதும் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டோம். அடுத்த ஆண்டு இன்னும் வலுவாக திரும்ப வர முடியும்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com