மும்பைக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் தோனி? சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

வருகிற 23ஆம் தேதி மும்பை அணிக்கு எதிராக நடைபெற உள்ள முக்கியமான லீக் ஆட்டத்தில் தோனி களமிறங்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மும்பைக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் தோனி? சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி
Published on

சென்னை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் வீரரான தோனி காயம் காரணமாக நடப்பு சீசனில் ஒரு போட்டியிலும் கூட விளையாடவில்லை. தோனியின் ஆட்டத்தை பார்ப்பதற்காகவே காத்திருக்கும் அவரது ரசிகர்கள் பலரும் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

காயத்தில் இருந்து மீண்ட தோனி, கடைசியாக நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலேயே களமிறங்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அன்றைய போட்டியில் விளையாடவில்லை. இது சென்னை ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்த நிலையில், வருகிற 23ஆம் தேதி மும்பை அணிக்கு எதிராக நடைபெற உள்ள முக்கியமான லீக் ஆட்டத்தில் தோனி களமிறங்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் தோல்வியால் திணறி வந்த சென்னை அணி, இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் சென்னை அணி கம்பேக் கொடுத்தாலும் தோனி களமிறங்கினால் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பதால், அவரது வருகையை ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்து உள்ளனர்.இதனால் மும்பைக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதால் அவரது ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

புள்ளிப் பட்டியலில் தற்போது சென்னை அணி 8வது இடத்திலும், மும்பை அணி 9வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் இந்த மோதல், இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com