

லண்டன்,
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த சாதனையாளரான இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை, இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் நெருங்கி வருகிறார்.
சச்சின் டெண்டுல்கர் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 200 போட்டிகளில் விளையாடி 15,921 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் தொடர்ந்து தக்க வைத்துள்ளார்.
சச்சினின் இந்த சாதனையை முறியடிக்க தற்போது ஜோ ரூட் வேகமாக முன்னேறி வருகிறார்.
இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், இதுவரை 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14,114 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ரூட்டிற்கு இன்னும் 1,807 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சினின் நீண்ட கால சாதனையை ஜோ ரூட் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.