மும்பைக்கு அதிர்ச்சி அளிக்குமா ஐதராபாத்?

கொல்கத்தா அணி ராஜஸ்தானை புரட்டியெடுத்ததன் மூலம் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது.
மும்பைக்கு அதிர்ச்சி அளிக்குமா ஐதராபாத்?
Published on

மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி 14 புள்ளிகளை எட்டினாலும் கூட, ரன்ரேட்டில் கொல்கத்தா மிக வலுவாக இருப்பதால் அந்த அணிக்கே வாய்ப்பு அதிகம். அதிசயத்தக்க நினைத்து பார்த்திராத இமாலய வெற்றி பெற்றால் மட்டுமே மும்பைக்கு வாய்ப்பு உண்டு.

ஐதராபாத் சன்ரைசர்சை (3 வெற்றி, 10 தோல்வியுடன் 6 புள்ளி) பொறுத்தவரை இந்த ஆட்டத்தின் முடிவு அவர்களுக்கு எந்தவித மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. ஏனெனில் இந்த சீசனில் அந்த அணிக்கு 8-வது இடம் தான் என்பது உறுதியாகி விட்டது. இருப்பினும் கடந்த ஆட்டத்தில் பெங்களூருவுக்கு 4 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி அளித்த ஐதராபாத் அணி போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்ய முனைப்பு காட்டும். அத்துடன் ஏற்கனவே மும்பையிடம் 13 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஐதராபாத் அதற்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com