வில்லியம்சன் தேர்வு செய்த 21-ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி.. யாருக்கெல்லாம் இடம்..?


வில்லியம்சன் தேர்வு செய்த 21-ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி.. யாருக்கெல்லாம் இடம்..?
x

image courtesy:PTI

தினத்தந்தி 15 Jun 2025 2:34 PM IST (Updated: 15 Jun 2025 8:16 PM IST)
t-max-icont-min-icon

வில்லியம்சன் தேர்வு செய்த அணியில் தன்னை சேர்த்து கொள்ளவில்லை.

வெலிங்டன்,

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு ஒரு அணியை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் நியூசிலாந்து நட்சத்திர வீரரான வில்லியம்சன் 21-ம் நூற்றாண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய ஆல் டைம் சிறந்த வீரர்களை கொண்டு அணியை உருவாக்கி அறிவித்துள்ளார்.

அந்த அணியில் பேப் 4 பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ஜோ ரூட், ஆகியோரை தேர்வு செய்யாத அவர் தன்னையும் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் ஸ்டீவ் சுமித்தை சேர்வு செய்துள்ளார். அத்துடன் சச்சின், சேவாக், மகேந்திரசிங் தோனி ஆகியோரையும் அணியில் சேர்த்துள்ளார்.

வில்லியம்சன் தேர்வு செய்த 21-ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி:-

மேத்யூ ஹெய்டன், சேவாக், ரிக்கி பாண்டிங், சச்சின், ஸ்டீவ் சுமித், ஏபி டி வில்லியர்ஸ், மகேந்திரசிங் தோனி, டேல் ஸ்டெயின், ஷோயப் அக்தர், கிளென் மெக்ராத், முத்தையா முரளிதரன்.

1 More update

Next Story