தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முழுமையாக கைப்பற்றியது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

துபாய்,

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த தொடர் நிறைவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியதன் மூலம் நியூசிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நியூசிலாந்து (75%) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (55%) 2ம் இடத்திலும், இந்தியா (52.77%) 3ம் இடத்திலும், வங்காளதேசம் (50%) 4ம் இடத்திலும் உள்ளன.

மேலும் இந்த பட்டியலில் 5 முதல் 9 இடங்களில் முறையே பாகிஸ்தான் (36.66%), வெஸ்ட் இண்டீஸ் (33.33%), இங்கிலாந்து (25%), தென் ஆப்பிரிக்கா (25%), இலங்கை (0%) அணிகள் உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com