மகளிர் ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

மகளிர் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
Published on

சிட்னி,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் போலவே மகளிர் அணிகளுக்கு இடையேயும் ஆஷஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடைசியாக ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு: அலிசா ஹீலி (கேப்டன்), டார்சி பிரவுன், ஆஷ்லீ கார்ட்னர், கிம் கார்த், அலானா கிங், போப் லிட்ச்பீல்ட், தஹ்லியா மெக்ராத், பெத் மூனி (விக்கெட் கீப்பர்), எல்லிஸ் பெர்ரி, மேகன் ஸ்கட், அன்னாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல், ஜார்ஜியா வேர்ஹாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com