மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஏ பிரிவில் இருக்கிறது
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்
Published on

தம்புல்லா,

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 26 ந் தேதி வரை இலங்கையில் உள்ள தம்புல்லா மைதானத்தில் நடக்கிறது.இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஏ பிரிவில் இருக்கிறது.பாகிஸ்தான், ஐக்கிய அரபுஎமிரேட்ஸ், நேபாளம் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகியவை பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

நாளைய தொடக்க நாளில் 2 ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.முன்னதாக நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நேபாளம்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com