பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தோனேசியா பந்து வீச்சு தேர்வு

ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தோனேசியா பந்து வீச்சு தேர்வு
Published on

துபாய்,

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்திற்கு எதிராக இந்தோனேசியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

பெண்கள் ஆசிய கோப்பை

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் துபாயில் இத்தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.

டாஸ்

இந்நிலையில், பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம், இந்தோனேசியா அணிகள் மோத உள்ளன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தோனேசியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com