பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அமீரகத்தை வீழ்த்தி இலங்கை வெற்றி

டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அமீரகத்தை வீழ்த்தி இலங்கை வெற்றி
Published on

துபாய்,

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம் - இலங்கை

இத்தொடரில் நேற்று நடந்த 2வது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து , முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 19.5 ஓவரில் 79 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய இலங்கை வீராங்கனைகள் மைதிலி, சேதன விமுக்தி அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கை வெற்றி

இதையடுத்து, 80 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 7.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய இலங்கை கேப்டன் சாமரி அத்தபத்து 48 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com