பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட் : வாழ்வா- சாவா ஆட்டத்தில் டிரையல்பிளாசர்ஸ்- வெலோசிட்டி இன்று மோதல்

இந்த ஆட்டத்தில் வெலோசிட்டி வெற்றி பெற்றால் இறுதிப்போட்டியை எட்டும்.
Image Courtesy : BCCI 
Image Courtesy : BCCI 
Published on

புனே,

பெண்களுக்கான சேலஞ்ச் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 3-வது மற்றும் கடைசி லீக்கில் தீப்தி ஷர்மா தலைமையிலான வெலோசிட்டி அணி, ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரையல்பிளாசர்சை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டத்தில் வெலோசிட்டி வெற்றி பெற்றால் சிக்கலின்றி இறுதிப்போட்டியை எட்டும். மாறாக அந்த அணி தோற்றால் வெலோசிட்டி, டிரையல்பிளாசர்ஸ், சூப்பர் நோவாஸ் அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் இறுதிசுற்றுக்கு தேர்வாகும். இறுதி போட்டி வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com