பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.
Image Courtesy: @BCCIWomen
Image Courtesy: @BCCIWomen
Published on

பெங்களூரு,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.

20 ஓவர் போட்டிக்கு தயாராக இந்த ஒருநாள் தொடரை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்வோம் என்று இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com