மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா

பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

லாகூர்,

தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 46 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 292 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. மழை நிற்க நீண்ட நேரம் ஆனதால் தென் ஆப்பிரிக்க அணியின் இன்னிங்ஸ் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. அந்த அணியில் அதிகபட்சமாக தஸ்மின் பிரிட்ஸ் 171 ரன்களும், லாரா 100 ரன்களும் அடித்தனர்.

பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணி வெற்றி பெற 46 ஓவர்களில் 313 அடிக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவர்களில் 287 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சித்ரா அமின் 122 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நடின் டி கிளெர்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com