பெண்கள் பிரீமியர் லீக்; டெல்லி கேப்பிடல்ஸ் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @wplt20
Image Courtesy: @wplt20
Published on

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 1 தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

அதேவேளையில் 6 ஆட்டங்களில் ஆடியுள்ள உ.பி.வாரியர்ஸ் அணி 2 வெற்றி, 4 தோல்வி கண்டு 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே இரு அணிகளும் மோதிய லீக் ஆட்டத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

டெல்லி அணிக்கு பதிலடி கொடுக்க வாரியர்ஸ் அணி கடுமையாக போராடும். அதேவேளையில் வெற்றிப்பயணத்தை தொடர டெல்லி அணி முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு டெல்லியில் தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com