மகளிர் டி20 உலகக் கோப்பை - 'ஆஸ்திரேலியாவை வீழ்த்த அதுதான் வழி’ - ஜெமிமா

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நாளை எதிர்கொள்கிறது.
மகளிர் டி20 உலகக் கோப்பை - 'ஆஸ்திரேலியாவை வீழ்த்த அதுதான் வழி’ - ஜெமிமா
Published on

லண்டன்,

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்காப்பு ஆட்டம் பலன் தராது என இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூறி இருக்கிறார்.

அரையிறுதி வாய்ப்பு

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 3 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு மிகவும் முக்கியமானதாகும்.

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்காப்பு ஆட்டம் பலன் தராது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

"ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய பலம், எதிரணியை ஒருபோதும் செட்டிலாக விடாமல் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதுதான். அவர்களுக்கு எதிராக தற்காப்பு ஆட்டத்தை மட்டும் நம்பி விளையாடினால் வெற்றி பெற முடியாது. ஆட்டத்தின் கட்டுப்பாட்டை நாம்தான் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற கடினமான சவால்களை எதிர்கொள்வது எங்கள் அணிக்கு மிகவும் பிடிக்கும்" என கூறினார்.

கடைசி லீக்

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நாளை எதிர்கொள்ள உள்ளது. லண்டனில் இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் துவங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com