மகளிர் டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
மகளிர் டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
Published on

லண்டன்,

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 12ம் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா - நெதர்லாந்து மோதல்

இத்தொடரில் சவுத்ஹம்டன் நகரில் இன்று நடைபெற்ற 14வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா , நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.அந்த அணியின் பெத் பொனி அதிகபட்சமாக 74 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து அணியின் ஐரிஷ் வில்லிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நெதர்லாந்தை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய வீராங்கனை கிம் கர்த் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com