பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்கா அணிக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா ..!

தொடர்ந்து 157ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடுகிறது.
பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்கா அணிக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா ..!
Published on

கேப்டவுன்,

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் கடந்த 10-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியாவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் (ஏ பிரிவு), வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து (பி பிரிவு) அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின. முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 5 ரன் வித்தியாசத்தில் இந்தியாவையும், இரண்டாவது அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 6 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி கேப்டவுனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 156ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய பெத் மூனே  53பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்.அலிசா ஹீலி 18 ரன்களும் , ஆஷ்லே கார்ட்னர் 29ரன்களும் எடுத்தனர் .

தென் ஆப்பிரிக்கா சார்பில் ஷபின் இஸ்மாயில் ,மரிசான் கேப் ஆகியோர்2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.தொடர்ந்து 157ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com