மகளிர் டி20 உலகக்கோப்பை; இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகள் மோத உள்ளன.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

துபாய்,

9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்திய அணி இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்ற பெற வேண்டும் என்ற நெருக்கடியில் களம் இறங்குகிறது. இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும். இதையடுத்து இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகள் மோத உள்ளன. இரு போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com