மகளிர் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தி நியூசிலாந்து திரில் வெற்றி

அதிரடியாக ஆடிய இஸ்ஸி ஷார்ப் 62 ரன்கள் குவித்தார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தி நியூசிலாந்து திரில் வெற்றி
Published on

லண்டன்,

மகளிர் டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை நியூசிலாந்து வீழ்த்தியது.

டி20 உலகக் கோப்பை

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற நியூசிலாந்து

இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது.

டார்சி கார்டர் அரைசதம்

தொடக்க வீராங்கனை டார்சி கார்டரின் அரைசதத்தின் உதவியால் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து வெற்றி

இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீராங்கனை அமீலியா கெர் 2(6) ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இசபெல்லா கேஸ் 16(17) ரன்களிலும், சோபி டிவைன் 1(4) ரன்களிலும் அவுட்டாகினர்.

இதையடுத்து இஸ்ஸி ஷார்ப் - ப்ரூக் ஹாலி டே ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய இஸ்ஸி ஷார்ப் அரைசதத்தை கடந்து அவுட்டானார். இறுதியில் 18.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நியூசிலாந்து அணி இலக்கை எட்டி திரில் வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com