மகளிர் டி20 உலக கோப்பை; 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அசத்தல் வெற்றி

நியூசிலாந்து 4-வது இடத்திற்கு முன்னேறி தொடரில் தன்னை தக்க வைத்து கொண்டுள்ளது.

மகளிர் டி20 உலக கோப்பை; 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அசத்தல் வெற்றி
Published on

சவுதாம்ப்டன்

ஐ.சி.சி. மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடின. தொடக்கத்தில் நடந்த 2 போட்டிகளில் தோற்றிருந்த நியூசிலாந்து இந்த போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது.

இதில், அயர்லாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், நியூசிலாந்து 140/6 எடுத்தது. இதனை தொடர்ந்து, 141 ரன்கள் என இலக்குடன் விளையாடிய அயர்லாந்து அணியில் கேப்டன் கேபி லூயிஸ் மற்றும் ஆர்லா பிரெந்தர்காஸ்ட் இணைந்து பார்ட்னர்ஷிப்புக்கு 110 ரன்கள் சேர்த்தனர்.

நியூசிலாந்து அணி

இதனால், போட்டி தொடரில் முதன்முறையாக வெற்றி பெறும் முனைப்பில் அந்த அணி இருந்தது. கேபி (58), ஆர்லா (59) அவுட் ஆன பின்னர் மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணியின் அதிரடியான பந்து வீச்சால், அயர்லாந்து அணி திணறியது.

இதனையடுத்து, அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்களே எடுத்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதனால், குரூப் பி பிரிவில் அயர்லாந்து அணி வெற்றி எதுவுமின்றி கடைசியில் உள்ளது. நியூசிலாந்து 4-வது இடத்திற்கு முன்னேறி தொடரில் தன்னை தக்க வைத்து கொண்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com