

சவுத்தாம்ப்டன்,
மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணிக்கு இலங்கை மகளிர் அணி அதிர்ச்சி அளித்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணியை முதல் முறையாக இலங்கை மகளிர் அணி வீழ்த்தியுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவித்தது. 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
இந்த தோல்வியின் மூலம் குரூப்-பி புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியடைந்திருந்த நியூசிலாந்து, தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளதால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு மங்கியுள்ளது.
முன்னதாக, தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்த இலங்கை அணி, நடப்பு உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.