மகளிர் டி20 உலகக் கோப்பை - சமாரி அதபத்து அதிரடி சதம்... அயர்லாந்தை வீழ்த்திய இலங்கை

கடைசி வரை ஆட்டமிழக்காமல் சமாரி அதபத்து 102 ரன்கள் எடுத்தார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை - சமாரி அதபத்து அதிரடி சதம்... அயர்லாந்தை வீழ்த்திய இலங்கை
Published on

லண்டன்,

மகளிர் டி20 உலகக் கோப்பையில் 20-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றுள்ளது.

அயர்லாந்து - இலங்கை மோதல்

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 20-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

131 ரன்கள் இலக்கு

இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் கேபி லூயிஸின் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.

கேப்டன் அதிரடி

இதையடுத்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி அதபத்து அற்புதமான தொடக்கம் கொடுத்தார். பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்று 55 ரன்கள் எடுத்தது.

இலங்கை வெற்றி

தொடர்ந்து அதிரடி காட்டிய சமாரி அதபத்து அரைசதம் கடந்து அசத்தினார். மறுபுறம் நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க வீராங்கனையான இமேஷா துலானி 20(27) ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து நிலக்சிகா சில்வா களமிறங்கியநிலையில், சமாரி அதபத்து சதம் விளாசி அசத்தினார். இறுதியில் 15.3 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் சமாரி அதபத்து 102 ரன்கள் எடுத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com