மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.
மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் நடந்து வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை (குரூப் 1) எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹாமன்பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் ஷாபாலி வர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜெமிமா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா , ஹர்மன்பிரீத் கவுர் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஹர்மன்பிரீத் கவுர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்தார். அவர் 68 ரன்களில் வெளியேறினார். ரிச்சா கோஷ் 34 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் சதிய இக்பால், பாத்திமா சனா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com