பெண்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கணை அபார சதம்

தொடக்க வீராங்கணை அலிக்சா ஹீலி 100 பந்துகளில் 13 பவுண்டரியுடன் தனது சதத்தை பதிவுசெய்தார்.
பெண்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கணை அபார சதம்
Published on

கிறிஸ்ட்சர்ச்,

பெண்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க வீராங்கணைகளாக அலிக்சா ஹீலியும், ராகேல் ஹெய்னசும் களமிறங்கினர். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர்.

ராகேல் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அலிக்சா ஹீலி சதம் அடித்து அசத்தினார். அவர் 100 பந்துகளில் 13 பவுண்டரியுடன் தனது சதத்தை பதிவுசெய்தார். ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 196 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com