மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: 69 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: 69 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா
Published on

கவுகாத்தி,

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 4வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே தடுமாறியது. இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 20.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா 69 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சினலோ அதிகபட்சமாக 22 ரன்கள் சேர்த்தார்.

சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீராங்கனை லின்சி 4 ஓவரில் 7 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கி விளையாடி வருகிறது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com