பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுக்கு டெங்கு

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுக்கு டெங்கு
Published on

புதுடெல்லி,

'கிரிக்கெட்டின் குரல்' என்று அழைக்கப்படும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவருக்கு வயது 62.

டெங்கு பாதிப்பின் காரணமாக உலகக் கோப்பை தொடரில் நாளை மறுநாள் அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு வர்ணனை செய்யமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், அக்டோபர் 19-ம்தேதி புனேவில் நடைபெறும் வங்காளதேசம்-இந்தியா போட்டியின் போது மீண்டும் வர்ணனைப் பணிக்குத் திரும்புவேன் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com