உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு...!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

மெல்போர்ன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7ம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியை முடித்த பின்னர் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கான அணியையும், ஆஷல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணிகளுக்கு பேட் கம்மின்ஸ் தலைமை தாங்குகிறார். ஸ்டீவ் ஸ்மித்துக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி விவரம்:-

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சாக்னே, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை-கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com